தமிழகத்தில் செயல்படும் வங்கிகளில் மத்திய நிதித்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
நிதி கொடுக்கல் வாங்கல் மற்றும் பணத்தை பாதுகாப்பாக வைப்பதற்கான நிறுவனமாக வங்கி செயல்படுகிறது. வங்கியானது தனது வாடிக்கையாளர்களுக்கு வைப்புக்களை ஏற்றல், கடன்களை வழங்கல் ,சேமிப்பினை ஊக்குவித்தல் மட்டுமின்றி பல்வேறு கட்ட நிதி சேவைகளையும் வழங்கி வருகிறது.
வங்கிகளின் நிதி கொடுக்கல் வாங்கல் அலுவலகம் வழியாக ஏடிஎம், மின்னஞ்சல், தொலைபேசி, இணையம் என பல்வேறு வழியில் நடைபெறுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் செலவாணி கூறிய பல பொருளாதார நடவடிக்கைகளை இயக்கி வருகின்றது. அனைத்து வங்கிகளும் இந்த வங்கியின் கீழ் இயங்கி வருகிறது. மேலும் நகரம் முதல் கிராமம் வரை அனைத்து இடங்களிலும் வங்கி சேவைகள் உள்ளது. தற்போதைய காலகட்டத்தில் வங்கிக்கு நேரடியாக செல்வதைவிட ஆன்லைன் மூலமாக அதிகம் பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு ஆன்லைன் பரிவர்த்தனை மிக வேகமாக வளர்ந்து வருகிற இந்நிலையில் ஆன்லைன் மூலமாக பரிவர்த்தனை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் இந்தியாவின் அலுவல் மொழிகள் அலுவல் பணிகளுக்கு முதன்மையாக ஹிந்தி மொழியும் ஆங்கிலமும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் நாடு முழுவதும் வங்கி சேவைகளில் ஹிந்தி மொழியும் ஆங்கிலமும் பயன்பாட்டில் இருக்கிறது.