இந்தியாவில் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆதார் அட்டை பிறந்த குழந்தை முதல் அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் ஆதார் மத்திய, மாநில அரசின் நலத் திட்டங்களை பெறுவதற்கும், அனைத்து வேலைகளுக்கும் அவசியமான ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, தமிழகத்தில் இ-சேவை மையங்களில் ஆதார் மூலமாக கட்டணம் செலுத்தும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
“ஆதார் மூலமான பரிவர்த்தனைகள் முறை” என்ற புதிய திட்டம் பொதுமக்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தவிர்ப்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தில் இ-சேவை மையத்தில் இருக்கும் கைரேகை கருவியில் சேவைகளுக்கான கட்டணத்தை செலுத்த நமது கைரேகையை பதிவிட வேண்டும். இந்த திட்டம் 600 இ-சேவை மையங்களில் முதல் கட்டமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.