Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு… முதல்வர் தமிழ் புத்தாண்டு வாழ்த்து…!!!

தமிழக மக்களுக்கு தமிழ் புத்தாண்டு தின வாழ்த்துக்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் நாளை தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. அதனால் வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் என அனைத்திற்கும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழ் புத்தாண்டை மக்கள் அனைவரும் மகிழ்வுடன் கொண்டாடும் எனது அன்பிற்குரிய தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதுமட்டுமன்றி மக்கள் அனைவரும் கொரோனா விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மேலும் முக கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது ஆகியவற்றை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |