Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு…. மின்தடை ஏற்படும் பகுதிகள்.!!!!

தமிழகத்தில்  உள்ள அனைத்து துணை மின் நிலையங்களிலும் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவது வழக்கம். ஏனென்றால் மின் கம்பங்களில்  ஏற்படும் மின்கசிவின் காரணமாக,சில நேரங்களில், விபத்துகள் ஏற்படுகிறது.எனவே இதை தவிர்ப்பதற்காக இந்த பராமரிப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது அந்தந்த துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகமானது தடை செய்யப்படுகிறது. மேலும் மின் தடை ஏற்பட உள்ள பகுதிகளுக்கு முன்னரே, இந்த அறிவிப்புகளும்  கொடுக்கப்படும்.

அதன்படி இன்று (24-05-2022) மின் விநியோகம், கீழ்கண்ட இடங்களில் நிறுத்தம் செய்யப்படுகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும்,  இதையடுத்து ஆனைமலை துணை மின் நிலையப் பகுதிகளான
சேத்துமடை, அண்ணாநகர், தம்மம்பதி, வேட்டைக்காரன்புதுார், ஒடையகுளம், தேவிபட்டணம் மற்றும் சரளைப்பதி ஆகிய பகுதிகளுக்கும் மின்தடை செய்யப்படுகிறது. மேலும் பொள்ளாச்சி துணை மின்நிலைய பகுதிகளான அம்பராம்பாளையம் மற்றும் அதன் சுற்று வாட்டார பகுதிகளிளும் மின்தடை செய்யப்படுகிறது.

Categories

Tech |