மத்திய பட்ஜெட் தமிழக மக்களுக்கு ஒரு மாய லாலிபாப் என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த 29ம் தேதி தொடங்கியது. 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு நேற்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடியது. இதில் மத்திய நிதியமைசச்ர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். பிரதமர் மோடி தலைமையில் தாக்கல் செய்யப்பட்ட 8வது பட்ஜெட் இது. இம்முறை கொரோனா பரவல் காரணமாக காகிதமில்லாமல் ஸ்மார்ட் பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளார் . நாடு சுதந்திரமடைந்ததில் இருந்து ஆவணங்கள் ஏதுமின்றி ஸ்மார்ட் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.இதன் மூலம் அரசுக்கு 140 கோடி மிச்சமாகும்.
இதனைத் தொடர்ந்து மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு பட்ஜெட் கணக்குகளை மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்தார். அதன் மூலம் நாடு முன்னேறும் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மத்திய பட்ஜெட் தமிழக மக்களுக்கு ஒரு மாய லாலிபாப் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆறு ஆண்டுகாலம் தமிழகத்தை புறக்கணித்த மத்திய அரசு தேர்தல் வருவதை முன்னிட்டு மெகா திட்டங்களை நிறைவேற்றப் போவதாக போக்கு காட்டி இருக்கிறது. நதிநீர் இணைப்பு திட்டங்களுக்கோ, நிவர் புரவி, கன மழை பாதிப்பு உள்ளிட்ட அவற்றுக்கான நிதியே இன்னும் ஒதுக்கப்படவில்லை என ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.