Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. 110 விதி கீழ்…. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அசத்தல் அறிவிப்புகள்….!!!

தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு உரையாற்றினார். அப்போது பேசிய முதல்வர், தமிழகத்தை வளமான, வலிமையான மாநிலமாகவும் அனைத்து துறைகளிலும் முன்னணி மாநிலமாக மாற்றவும் பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. சமூகம் மேம்பாட்டிலும், தனிமனித வளர்ச்சியிலும் கவனம் செலுத்தக்கூடிய வகையில் நாள்தோறும் பல திட்டங்களை தீட்டி வருகிறோம். அனைவரின் நலனை முன்னிறுத்தியே திட்டங்கள் தீட்டப்படுகிறது. இதுவரை 3,337 அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளோம். அறிவிப்புகளின் நிலை கண்காணிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 70% அறிவிப்புகள், அதாவது 2607 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்று அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எஞ்சிய அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடவும்‌ அவற்றை செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தரமான கல்வி அரசு பணிகள் வழங்கி வருகிறது. கடந்து 2 ஆண்டுகளில் 15 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளியில் புதிதாக சேர்ந்துள்ளனர். புதிதாக சேர்ந்த மாணவியின் வசதிக்காக அரசு பள்ளிகளில் ரூ.150 கோடி மதிப்பில் 7200 வகுப்பறைகள் நடப்பு ஆண்டிலே புதிதாக கட்டப்படும். அரசு பள்ளிகளில் பாதுகாப்பான கற்றல் சூழல் உறுதி செய்யப்படும்.

அதனைபோல உள்ளாட்சி அமைப்புகளில் பழுதடைந்து அனைத்து சாலைகளையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான சிறப்பு நிதியாக ரூ.2200 கோடி வழங்கப்பட்டு 4,600 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகள் நடப்பு ஆண்டிலேயே மேம்படுத்தப்படும்‌. அதன்பிறகு ரூ.7,388 கோடி மதிப்பில் 16,390 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகள் படிப்படியாக மேம்படுத்தப்படும். இதனையடுத்து 1.70 கோடி பயணிகள் அரசு பேருந்துகளில் பயணித்து வருகின்றனர். 44 லட்சம் பெண் பயணிகள் சராசரியாக இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். ரூ.2000 கோடி சேமிப்பாக மாறி உள்ளது. இதை அரசு வருமான இழப்பாக கருதவில்லை. மகளுக்கான வளர்ச்சியாகவே இதை பார்க்கிறோம். ரூ. 500 கோடி மதிப்பில்1000‌புதிய பேருந்துகளை வாங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நல்ல நிலையில் உள்ள ஆயிரம் பழைய பேருந்துகளை புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2,013 டீசல் பேருந்துகள், 500 மின்சாரப் பேருந்துகளை வாங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தமிழக வரலாற்றில் ஒரு கரும்புள்ளி. இப்போது நினைத்தால் கூட நடுங்குகிறது. துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரில் குடும்பங்களுக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்யும் அரசாக திமுக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |