தமிழகத்தில் அரசுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக போட்டி தேர்வுகள் எதுவும் நடைபெறாமல் இருந்த நிலையில் இந்த வருடம் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு அதற்கான தேர்வுகளும் நடந்து முடிந்துள்ளது. தற்போது தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து தேர்வர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள பணியிடங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய பற்றாக்குறை நிலைமையை சமாளிக்க ஒப்பந்த அடிப்படையில் கூடுதலாக 400 டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் சாலை போக்குவரத்து இன்ஸ்டியூட் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியாக உள்ளது.