Categories
மாநில செய்திகள்

தமிழக பேருந்து பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. இனி இப்படித்தான்…. சூப்பர் அறிவிப்பு….!!!

சென்னையிலிருந்து தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரசு விரைவுப் பேருந்துகள் மற்றும் ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் பயணிப்பவர்களுக்கு உணவு மற்றும் இயற்கை உபாதைகள் போன்ற அடிப்படை காரணங்களுக்காக நெடுஞ்சாலைகளில் உள்ள உணவகங்களில் இந்த பஸ்கள் நிறுத்தப்படும். ஆனால் இவ்வாறான உலகங்களில் உணவுப் பொருட்களை அதிக விலைக்கு விற்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. புகாரின் அடிப்படையில் இந்த உணவகங்களில் சோதனை நடத்திய அதிகாரிகள் நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து உணவகங்களிலும் பஸ்களை நிறுத்தக்கூடாது எனவும் குறிப்பிட்ட சில உணவகங்களில் மட்டுமே பஸ்களை நிறுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

குறிப்பாக விக்கிரவாண்டியில் உள்ள 5 உணவகங்களில் பஸ்களை நிறுத்த கூடாது என போக்குவரத்து துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். சென்னையிலிருந்து திருச்சி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் செல்லும் பேருந்துகள் குறிப்பிட்ட உணவகங்களில் மட்டுமே பஸ்களை நிறுத்த வேண்டும் எனவும், அதோடு சென்னையில் இருந்து நெல்லை தென்காசி, கன்னியாகுமரி நாகர்கோயில் போன்ற மாவட்டங்களில் வரும் பேருந்துகள் பிரசன்ன பவன் ஹோட்டலில் மட்டுமே பஸ்களை நிறுத்த வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஓட்டுனர்கள் தினசரி பஸ்சை இயக்கியது மற்றும் ஓட்டல்களில் நின்றது குறித்த முழு விவரங்களையும் பணிமனை வாரியாக வாட்ஸ் அப் செயலி மூலம் அந்த பகுதிகளை மேலாளர்களுக்கு அனுப்ப வேண்டும் எனவும் அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |