Categories
மாநில செய்திகள்

தமிழக பேருந்துகளில் பயணம்…. நெல்லை பெண்கள் டாப்…. அமைச்சர் ராஜகண்ணப்பன்…!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.அதன்படி பேருந்துகளில் பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் பேருந்துகளில் மொத்தம் பயணம் செய்பவர்களில் 58 சதவீதம் பேர் பெண்கள் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். இதில் நெல்லை மாவட்டத்தில் மட்டும் சராசரியாக 68% பேர் தினசரி பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். இதையடுத்து பெண்கள் இலவச பயணம் செய்யும் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |