Categories
மாநில செய்திகள்

தமிழக பேருந்துகளில் ஆக.,3 முதல்….. அரசு புதிய அறிவிப்பு….!!!

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் சுமை பெட்டி வாடகை திட்டம் ஆக.,3 முதல் செயல்படுத்தப்படும் என அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் பொது மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது இதனால் மக்களும் பயன் அடைந்து வருகிறார்கள்.

இந்நிலையில் பேருந்துகளில் உபயோகப்படுத்தப்படாத சுமை பெட்டிகளை மாத வாடகைக்கு விட திட்டமிடப்பட்டுள்ளது. மாதம் முழுவதும் பேருந்தில் உள்ள சுமை பெட்டியை மாத வாடகை/ தினசரி வாடகை செலுத்தி பயன்படுத்தலாம். வியாபாரிகள், வணிகர்கள், முகவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.

Categories

Tech |