Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களே…. இன்றே கடைசி நாள்…. உடனே போங்க….!!!

தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு சிறப்பு போஸ்ட் மெட்ரிக் உதவித் தொகை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் ரூ.1,200 முதல் ரூ.4,200 வரை மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. 10 ஆம் வகுப்பு முதல் அதற்கு மேற்பட்ட வகுப்பு மாணவர்கள் விண்ணப்பித்து இந்த உதவி தொகையை பெற்றுக்கொள்ளலாம். இதையடுத்து தற்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய ஆதிதிராவிட மாணவ மாணவிகள் கல்வி உதவித் தொகையை பெற்றுக் கொள்ள விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த திட்டங்களுக்கான விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலமாக பெறலாம். விண்ணப்பிக்க https://escholarship.tn.gov.in என்ற இணையதளம் ஒன்றை அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஜாதி சான்றிதழ், வருமானச் சான்று, மதிப்பெண் சான்று, சேமிப்பு கணக்கு புத்தக நகல் மற்றும் ஆதார் எண் போன்ற ஆவணங்களுடன் இணைத்து விண்ணப்பங்களை இன்று மாலைக்குள் சமர்ப்பித்து முடிக்கவேண்டும். அத்துடன் மாணவர்கள் சரியான முறையில் விண்ணப்பிக்கிறார்களா? என்று கல்வி நிறுவனங்கள் கண்காணிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |