தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க பள்ளி கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மாணவர்கள் எதிர்காலத்தில் தொழில் முறை கலைஞர்களாக வருவதற்கான வாய்ப்புகளும் ஏற்படுத்தித் தரக்கூடிய வகையில் கலை தொடர்பான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி திரையிடல் திட்டம் ஒன்றை ‘சிறார் திரைப்பட விழா’ என்ற பெயரில் பள்ளி கல்வித்துறை ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை பள்ளிகல்விதுறை வெளியிட்டு உள்ளது. அதில், தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சிறார் திரைப்படங்கள் மாதந்தோறும் திரையிடப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படங்களை அதற்கான பாட வேளையில் மட்டுமே காண்பிக்கப்பட வேண்டும்.
அதுமட்டுமில்லாமல் திரைப்பட காண்பிப்பதற்கு முன்பும் பின்னும் மாணவர்களுடன் ஆசிரியர்கள் கலந்துரையாட வேண்டும். அதனை தொடர்ந்து எந்த படங்கள் காண்பிக்கப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அந்தந்த பள்ளிகளுக்கு விவரங்களை அனுப்படும். இந்த திரைப்படம் முடிவடைந்த பிறகு மாணவர்களிடம் திரைப்பட தொடர்பான விமர்சனத்தை எழுதி தர வேண்டும். இதில் சிறப்பாக விளங்கும் மாணவர்களுக்கு மாவட்டம் மற்றும் மாநில அளவில் வாய்ப்பு வழங்கப்படும். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா பயணம் மேற்கொள்ளலாம் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த திட்ட மாணவர்களுக்கு வாழ்வில் நற்பண்புகளை மேம்படுத்தவும் மற்றும் கலை திறனை மேம்படுத்தும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.