Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு இப்படியொரு செக்…. அமைச்சர் அன்பில் மகேஷ் புதிய அதிரடி….!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதன் பிறகு பாதிப்பு குறைந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது. பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் மாணவர்களின் நலனை கருதி பாடத்திட்டங்கள் அனைத்தும் குறைக்கப்பட்டு குறைந்த பாடத்திட்டத்தில் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது. தற்போது நடப்பு கல்வி ஆண்டு தொடங்கி அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பாடங்களை குறைக்கும் திட்டம் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அரசு பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளில் புதிதாக 52 ஆயிரம் குழந்தைகள் சேர்ந்து உள்ளன. 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை ஒன்பது லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.கொரோனாவுக்கு பிறகு இந்த முறை தான் கல்வியாண்டு முழுமையாக நடக்க உள்ளதால் பாடங்களை குறைக்க போவதில்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டில் பள்ளிகள் முழுமையாக நடைபெறுவதால், எந்தப் பாடத்தையும் குறைக்க போவது இல்லை. இதனால், மாணவா்கள் கடந்த காலங்களில் எப்படி ஒழுக்கமாக நடந்து கொண்டார்களோ அப்படி மாற வாய்ப்பு உள்ளது. இதற்காக ஒளிபரப்பப்படும் சிறார் திரைப்படம் மூலம் மாணவா்களின் மன நிலையில் மாற்றம் வரும் என  அவர் தெரிவித்தார்.

Categories

Tech |