Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை, குறும்பட போட்டிகள்…. ரூ.1 லட்சம் பரிசு…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை, குறும்பட போட்டிகளை ஆரோவில் அறக்கட்டளை சிறப்பு பணி அலுவலரான தமிழக கவர்னர் ரவி அறிவித்துள்ளார். கட்டுரைகள் ஒரு பக்கத்திற்கு 20 வரிகள் வீதம் 10 பக்கங்களுக்கு மிகாமல் பிடிஎப் கோப்பு வடிவில் இருக்க வேண்டும். அதுவே குறும்படங்கள் ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் வரை இருக்கலாம். செப்டம்பர் 16ஆம் தேதி மாலை 6 மணிக்குள் கட்டுரை மற்றும் குறும்படங்கள் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்களுக்கு பரிசுத்தொகை 25 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்கள் தமிழ் கட்டுரைகளை, [email protected]; ஆங்கில கட்டுரைகளை, [email protected] என்ற ‘இ – மெயில்’ முகவரிக்கு அனுப்ப வேண்டும். கல்லுாரி மாணவர்கள் அதே ‘இ – மெயில்’ முகவரியில், school என்பதற்கு பதிலாக college என்ற வார்த்தையை பதிவிட்டு இ – மெயில் அனுப்பவும்.குறும்படங்ளை https://www.aurobindo150shortfilm.comஎன்ற தளத்தில் பதிவேற்ற வேண்டும்.

மேலும் பள்ளி மாணவர்கள், ‘ஸ்ரீஅரவிந்தரும் ஆரோவில்லும்; இந்தியாவின் மேன்மைக்கு புத்தொளியூட்டுதல்’ என்ற தலைப்பிலும்; கல்லுாரி மாணவர்கள், ‘ஸ்ரீஅரவிந்தரும் ஆரோவில்லும்; மனித குலத்திற்கான இந்தியாவின் கொடை’ என்ற தலைப்பிலும், கட்டுரை, குறும்பட போட்டியில் பங்கேற்கலாம்.

Categories

Tech |