Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு…. பிப்…25 ஆம் தேதி…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் கொரோனா 3-வது அலையின் தாக்கம் குறைய தொடங்கியதால் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து பள்ளிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் பள்ளிகள் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பேச்சுப் போட்டியை நடத்த இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில் சிவகங்கையில் உள்ள மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் வருகிற பிப்ரவரி 25ஆம் தேதி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடைபெற இருக்கிறது. இதில் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு முற்பகல் 9 மணி அளவில் நடைபெறும் எனவும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு பிற்பகல் 2 மணி அளவில் போட்டிகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றியடையும் மாணவ-மாணவிகளுக்கு பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

இந்த போட்டியில் பங்கேற்பவர்கள் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். மேலும் சிவகங்கையிலுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்று வருபவராக இருத்தல் வேண்டும். இது குறித்த கூடுதல் தகவல்களை பெற 04575 241487 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். ஆகவே மாணவ-மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி கூறியுள்ளார்.

Categories

Tech |