Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு…. அடுத்த 4 வருடங்களுக்கு ரூ.7000 கோடி…. அமைச்சர் வெளியிட்ட தகவல்….!!!!

தர்மபுரி அரசு மருத்துக் கல்லூரி கலையரங்கில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி போன்ற நான்கு மாவட்டங்களிலுள்ள கல்வி அதிகாரிகளுடனான மண்டல அளவிலான 2ஆம் கட்ட ஆலோனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று, பள்ளிக்கல்விதுறை வளர்ச்சி மற்றும் ஆய்வு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த கூட்டம் முடிந்தபின் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, 4 மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் பள்ளிகளுக்கு என்ன தேவை, தன்னிறவு பெருவதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் பின்தங்கிய மாவட்டத்தில் கல்வியை எவ்வாறு மேம்படுத்துவது, மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச பொருட்கள் சரியாக வழங்கப்பட்டுள்ளதா..?, அதில் இன்னும் எவ்வளவு தேவை?, அதை விரைவில் எவ்வாறு வழங்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பெண் குழந்தைகள் கல்வி இடைநிற்றல் அதிகமாக இருக்கிறது. ஓசூர் அருகேயுள்ள தளி பகுதியில் ஒரு கிராமத்திற்கு நேரில் பார்வையிட்டு வந்தேன். தமிழக முதலமைச்சர் பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு புரட்சிகரமான திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அவற்றில் மிக முக்கியமான ஒன்று புதுமைப் பெண் திட்டமாகும்.

தமிழகம் முழுதும் பள்ளிக்கல்வித் துறையில் கற்றல் இடைவெளியுள்ள இடங்களில் புதுமைப் பெண் திட்டம் பயன் உள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். 6- 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவிகளுக்கு, உயர்கல்வி படிக்கின்ற மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படுவது என்பது புரட்சிகரமான திட்டமாகும். அரசு பள்ளிகளில் கழிவறை என்பது மிக முக்கியமானது ஆகும். நாங்கள் முதலில் பள்ளியில் உள்ள கழிவறைக்கு சென்றுதான் ஆய்வு செய்கின்றோம். அவ்வாறு திடீர் ஆய்வு மேற்கொள்ளும்போது தான் உண்மை நிலவரம் தெரியும். அத்துடன் பேராசிரியர் அன்பழகனார் கல்வி மேம்பாட்டு திட்டத்தின் வாயிலாக அனைத்து பள்ளிகளிலும் கழிவறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இதற்கென அடுத்த 4 வருடங்களில் பள்ளிக்கல்வித்துறைக்கு 7000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். அதில் இந்த வருடத்திற்கு 1300 கோடி ரூபாய் கொடுக்கப்படும் என்று பேசினார்.

 

Categories

Tech |