துப்புரவு தொழிலாளிக்கு ஓய்வூதியப் பலன்களை வழங்காமல் இழுத்தடிக்க முயற்சி செய்வதாக கூறி தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு ரூபாய் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த அபராத தொகையை உச்சநீதிமன்ற பணியாளர் சங்க நல நிதிக்கு நான்கு வாரங்களுக்குள் தமிழக அரசு செலுத்த வேண்டும்.
மேலும் இதுபோன்ற தேவையற்ற வழக்குகளை தொடர அனுமதி அளித்த அதிகாரிகளிடம் இருந்து இது அபராத தொகையை தமிழக பள்ளிக்கல்வித்துறை தேவைப்பட்டால் வசூலித்துக்கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.