Categories
மாநில செய்திகள்

தமிழக ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம்…. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு….!!!

அரசு பள்ளி ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அமைச்சர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஜூன்‌ 13-ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். இதன் காரணமாக பள்ளிகளை சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கும்பகோணம் அருகே தாராசுரத்தில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். அவர் முன்னதாக அறிவிக்கப்பட்டபடி ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படும் என கூறினார். அதன்பிறகு பள்ளி வாகனங்கள் அனைத்தும் தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என பள்ளிகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

இதனையடுத்து தனியார் பள்ளிகளில் பராமரிப்பு செலவுகள் என்று பெற்றோர்களிடம் கூடுதலாக கட்டணம் வசூலித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் எச்சரித்துள்ளார். அதன்பின் பள்ளிகளின் நேரத்தை மாற்றுவது தொடர்பாக முதல்வருடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும். மேலும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் 5 வருடங்களுக்கு மேல் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.

Categories

Tech |