Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை…. அரசு புதிய அதிரடி….!!!!

தமிழக முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிப்பதை தாண்டி அரசு சார்பாகவும் பள்ளி நிர்வாகம் சார்பாகவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதாவது புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு போதனை வகுப்புகள் நடத்தப்படுவது, நீதி கதைகள், அறநெறி முறைகள் மற்றும் அகிம்சை போன்றவற்றை கற்பிப்பது என மாணவர்களின் எதிர்காலத்திற்கு ஒரு நல்ல சமுதாய அக்கறை கொண்டவராக உருவாக்க இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு இருக்கையில் நேற்று நெல்லை மாவட்டம் களக்காட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் 12ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் உடன்பயிலும் சக மாணவனை கத்தியால் குத்தியுள்ளார். அதனால் காயம் ஏற்பட்ட மாணவன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அந்த பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்குவதற்கு அரசு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும் இது போன்ற செயல்களில் இனி மாணவர்கள் யாரும் ஈடுபடாத வகையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |