Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில் பணியாற்றும்…. பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம்…? வலுக்கும் கோரிக்கை….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அறிவித்த வாக்குறுதி ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. அதில் குறிப்பாக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தி வழங்கி உள்ளது. இந்நிலையில் பகுதி நேர ஆசிரியர்கள் முதல்வருக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர். அதாவது தமிழகத்தில் அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கணினி, உடற்கல்வி, ஓவியம் ,இசை, கட்டடக்கலை உள்ளிட்ட பல பாடப்பிரிவுகளில் பகுதி நேர ஆசிரியர்கள் கடந்த 10 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களுக்கு தொடக்கத்தில் 5000 மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டது.

அதன் பிறகு படிப்படியாக ஊதிய உயர்வு வழங்கப்பட்டு கடந்த 2021 ஆம் வருடம் முதல் பத்தாயிரம் ஆக சம்பளம் பெறுகின்றனர். ஆனால் தற்போது கிராம பகுதிகளில் வேலை செய்யும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் கூட இதைவிட அதிகமான சம்பளம் பெறுகிறார்கள். இப்படி பட்டம் பெற்று 10 வருடங்களாக மிகவும் குறைவான ஊதியத்தில் பகுதி நேரம் வேலை செய்யும் பலரும் 45 முதல் 50 வயது நிரம்பியவர்களாகவே உள்ளனர். இவர்கள் வேறு வேலைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. அதனால் இவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |