Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில் இனி வாரம் ஒரு நாள்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் இரண்டு வருடங்களுக்குப் பிறகு அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி கல்வித்துறை புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதில் பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் நாளை திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிகள் செயல்படும் நேரத்தை அந்தந்த பள்ளிகளிலேயே முடிவு செய்யலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் பள்ளிகளில் இனி வாரத்தில் ஒருநாள் நீதி போதனை வகுப்புகள் நடைபெறும். ஒவ்வொரு வாரமும் கலை செயல்பாடுகளுக்கு இரண்டு வகுப்புகள் ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது

Categories

Tech |