தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் கல்வி தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்காகவும், மாணவர்களின் கற்றல் அடைவு திறனை அதிகரிப்பதற்காகவும் பல முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மாணவர்களின் இடைநிற்றலை தடுத்தல், விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வருதல், தாமதம் தவிர்த்தல் போன்றவற்றிற்கு தலைமை ஆசிரியர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஒன்றாம் முதல் 12 ஆம் வகுப்பு ஆசிரியர்கள் அனைவரது வருகையும் செல்போன் செயலிவிரல் பதிவு முறை மூலமாக வருகை பதிவேடு பராமரிக்கும் நடைமுறை தற்போது முதன்முறையாக நடைமுறைக்கு வர இருக்கின்றது.
அதன்படி வருகின்ற ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் ஆசிரியர்களின் வருகை செயலியின் மூலமாக பதிவு செய்யப்படும் என கல்வித்துறை அதிரடி உத்தரவை வெளியிட்டு இருக்கிறது. ஆசிரியர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு சென்றதும் தங்களுடைய செல்போன் செயலியை ஆன் செய்து விரல் ரேகை பதிவு செய்ய வேண்டும். அதில் எந்த இடத்தில் இருந்து எத்தனை மணிக்கு பதிவு செய்கிறார்கள் என்பது காட்டப்படும் அது பற்றி எல்லா விவரமும் கல்வித்துறைக்கு சென்றடையும் விரல் ரேகை பதிவின்போது இன்டர்நெட் சிக்னல் கிடைக்காவிட்டாலும் அதனால் எந்த பிரச்சனையும் வராது என கூறப்பட்டுள்ளது. இது குறித்து அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் விளக்க நோட்டிஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.