Categories
மாநில செய்திகள்

தமிழக பட்ஜெட் 2022-23 : பொருளாதார நிச்சயமற்ற நிலை இருக்கும்…. நிதியமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!

திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தலைமைச் செயலகத்தில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிதியாண்டுக்கான காகிதமில்லா தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தாக்கல் செய்தார்.

இந்நிலையில் பட்ஜெட் குறித்து பேசத் தொடங்கிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு கொடுத்த மானியம், அகவிலைப்படி உயர்வின் தாக்கம் பட்ஜெட்டில் இருக்கும். வரும் நிதியாண்டில் பொருளாதார நிச்சயமற்ற நிலை இருக்கும். சமூக நலத்திட்டங்கள் அனைத்தும் வழக்கம் போல் எந்த தடையுமின்றி செயல்படுத்தப்படும். உக்ரைன் ரஷ்யா போரால் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |