Categories
மாநில செய்திகள்

தமிழக தேர்வு மையங்களில் இந்தியில் அறிவிப்பு…. தேர்வர்கள் அவதி….!!!!

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 24 குடிமை பணிகளுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் ஆன யுபிஎஸ்சி மூலம் தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. அதில் முதல் நிலை, முதன்மை மற்றும் நேர்காணல் என்று மூன்று விதமான தேர்வுகள் மூலமாக மாணவர்கள் இந்த பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி நடப்பாண்டில் 712 காலி பணியிடங்களை நிரப்புவதற்கு யுபிஎஸ்சி கடந்த மார்ச் மாதம் அறிவிப்பை வெளியிட்டது. முதல்நிலைத் தேர்வு ஜூன் 27ஆம் தேதி நடைபெறும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.

ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வு இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 37 ஆயிரம் பேர் குடிமைப் பணிகளுக்கான முதல்நிலை தேர்வு எழுதுகின்றனர். இதற்காக சென்னை, கோவை, மதுரை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் 70 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது

. இதையடுத்து யுபிஎஸ்சி தேர்வு நடைபெறும் அயனாவரம் தேர்வு மையம் உள்ளிட்ட சில மையங்களின் வெளியே ஒட்டியுள்ள அறிவிப்பு முழுவதும் இந்தியில் உள்ளது. தமிழில் இல்லை என்றாலும் ஆங்கிலத்தில் இருந்தால்கூட தேர்வர்கள் அதனை புரிந்து கொள்ள முடியும். இந்தியில் மட்டுமே உள்ளதால் இந்தி தெரியாத தேர்வர்கள் அறிவிப்பில் என குறிப்பிடப்பட்டு உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியாமல் அவதி அடைந்தனர். இதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |