Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழக தனியார் பள்ளிகளுக்கு….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கினால் பள்ளி மற்றும் கல்லுாரிகளில் 2 வருடங்களில் பல மாதங்கள் நேரடி வகுப்புகள் நடைபெறாமல், ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வந்தது. இதற்கிடையில் பெற்றோர் பலரும் வேலை வாய்ப்புகள் இன்றியும், வருமானம் இழந்தும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக பல்வேறு தனியார் பள்ளிகளில் மாணவர்கள் கல்விகட்டணம் பாக்கி வைத்து உள்ளனர். இந்த பாக்கிக் கட்டணத்தை கெடுபிடி காட்டி வசூலிக்க கூடாது என்று  பள்ளிக்கல்வித்துறை சார்பாக முன்பே அறிவுறுத்தப்பட்டது.

தற்போது கல்வியாண்டு முடியவுள்ள நிலையில் கல்வி கட்டண பாக்கியுள்ள மாணவர்களை சில தனியார் பள்ளிகள் வகுப்பறைகளில் அனுமதிக்காமல் வெளியே அனுப்புவதாகவும், பள்ளிகளுக்கு வரக்கூடாது என தடைவிதிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. அதனை தொடர்ந்து முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் தனியார் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டு உள்ளது. அவற்றில் கட்டணம் பாக்கியுள்ள மாணவர்களை வகுப்பறைகளில் புறக்கணிக்கவில்லை, அவர்களை வெளியே அனுப்புவதில்லை என்று பள்ளிகள் தரப்பில் உறுதிசான்று வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |