Categories
மாநில செய்திகள்

தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை பெயர் மாற்றம்…. என்ன பெயர் தெரியுமா?….!!!

தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்கவும் மற்றும் மின் ஆளுகையின் வளர்ச்சியை உறுதி செய்யும் நோக்கத்துடனும் தகவல் தொழில்நுட்பவியல் துறை கடந்த 1998 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ஆம் தேதி உருவாக்கப்பட்டது. இந்த தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை துறைகளின் வளர்ச்சியானது ஒன்றுக்கொன்று தொடர்புடையது ஆகும். எனவே ஒருங்கிணைந்த வளர்ச்சியை அடைவதற்கு முன் முயற்சியுடன் கூடிய ஒருங்கிணைந்த கொள்கையை அணுகுமுறை தேவைப்படுகிறது. இதன் முதல் கட்டமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப பிரிவுக்கு தலைமை தாங்கும் வகையில் தலைமை தொழில்நுட்ப அதிகாரி பதவி தகவல் தொழில்நுட்பவியல் துறை ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து வளர்ந்து வரும் மற்றும் தொழில் நுட்பங்களில் தொடக்கநிலை நிறுவனங்கள் மூலம் புதுமைகளை உருவாக்குவதற்கு ஏதுவாக தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் ஒன்று சென்னையில் அரசால் நிறுவப்பட்டு வருகிறது. எனவே மாநிலத்தில் தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப சேவைகளில் வலுப்படுத்த இந்தத் துறை, “தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை” என மறு பெயரிடப்பட்டு அறிவிக்கப்பட்டது. அதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Categories

Tech |