Categories
மாநில செய்திகள்

தமிழக சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு….. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!!

தமிழகத்தை சேர்ந்த சிறந்த விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு ரொக்க பரிசு வழங்குவதற்கான நிதிகளை ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில், சிறந்த விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கக்கூடிய வகையில் முதல்வரின் மாநில விளையாட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன் படி, 2018-19, 2019-20 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு வீரர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, சிறந்த விளையாட்டு வீரர் வீராங்கனைகளான எஸ்.பிரிதிவி சேகர், ஜீவன் நெடுஞ்செழியன், ஸ்ரீ நிவேதா, சுனைனா சாரா குருவில்லா, பிரஜ்நேஸ், ஆர்.மோகன் குமார், பி.அனுசியா பிரியதர்ஷினி, எஸ்.சிலினா தீப்தி ஆகியோரும் பயிற்சியாளராக சத்குருதாஸ், ஜி. கோகிலா, கே.எஸ். முகமது நிசாமுதின், எஸ்.கோகிலா, சி.ராஜேஷ் கண்ணா, பி.முரளி, ஆர்.ராமசுப்பிரமணியன், ஏ.ஆரோக்கிய மெர்சி மற்றும் நடுவர்களாக வி.பி.தனபால், டி.சுந்தர்ராஜ் ஆகியோருடன் சிறந்த விளையாட்டு அமைப்பாக தமிழக கால்பந்து கூட்டமைப்பு ஆகியன தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்பட உள்ளது. மேலும் இதற்கான நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |