தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி மார்ச் 4ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதன்படி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் நடந்து கொண்டிருக்கிறது. தமிழக சட்டமன்றத்தின் பதவிக்காலம் வருகின்ற மே 24-ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், 234 தொகுதி சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன.
இந்நிலையில் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி மார்ச் 4ஆம் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களாக ஆலோசனை நடத்தி வந்த சூழ்நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மார்ச் மாதத்தில் இரண்டாம் வாரம் முதல் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வர வாய்ப்புள்ளது.