தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம், வாக்கு சதவீதத்தில் 8 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, 154 தொகுதிகளில் நேரடியாக களமிறங்கியது. அதன் கூட்டணி கட்சிகளான சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி இரண்டும் தலா 40 தொகுதிகளில் களமிறங்கியது.
ஆனால் மக்கள் நீதி மையம் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. எனினும் கோவை தெற்கு தொகுதியில் இறுதிவரை கமலஹாசன் கடுமையான போட்டி கொடுத்துக்கொண்டிருந்தார். ஆனால் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.கவின் பெண் வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார்.
மொத்தமாக இந்த தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் 2.45% வாக்குகள் (10,58, 547) பெற்று, வாக்கு சதவீதத்தின் படி எட்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.