Categories
மாநில செய்திகள்

தமிழக சட்டப்பேரவை…. பொதுப்பணித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு …!!!!!!!

சட்டப்பேரவையில் தமிழகத்திலுள்ள நான்குவழி சாலைகள் 6 வழிச்சாலையாக மாற்றப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் பதில்  அளித்துள்ளார்.

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நெடுஞ்சாலை துறை தொடர்பாக உறுப்பினர்கள் தமிழரசி, செல்வபெருந்தகை, கே.சி.கண்ணப்பன், கோவி செழியன் உள்ளிட்ட பலரும் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் ஏ.வ.வேலு பதிலளித்துள்ளார். அப்போது, தமிழகத்தில் உள்ள தரை பாலங்கள் அனைத்தும் மேம்பாலங்கள் ஆக மாற்றும் பணி நிதிக்கு ஏற்ப மேற்கொள்ளப்படும். ஸ்ரீபெரும்புதூர் சந்திப்பு இடையே தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

மேலும் தமிழகத்தில் நான்கு வழி சாலை, ஆறு வழிச்சாலை களாக மாற்ற முடிவு செய்யப்பட்டிருக்கிறது. பூந்தமல்லி ஸ்ரீபெரும்புதூர் வரை மேம்பாலம் அமைக்க வேண்டுமென மத்திய அரசிடம் வலியுறுத்தப்படுகிறது. சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் புறவழிச்சாலை புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசிடம் வலியுறுத்தி இருக்கின்றோம். பல வழிகளில் அழுத்தம் கொடுத்த பின்  தான்  மத்திய அரசால் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறுகின்றது.

இந்நிலையில் அவிநாசியில் மேம்பாலம் அமைக்க கடந்த ஆட்சியில் 100 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இப்போது பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும் கோவை பகுதியை எப்போதும் தமிழக அரசு புறக்கணிக்கவில்லை. மேலும் இது போன்ற திட்டங்களின் மூலமாக கோவையை புறக்கணிக்கவில்லை என்பது தெளிவாகின்றது.

Categories

Tech |