Categories
மாநில செய்திகள்

தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் மீண்டும் ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால்!

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்ததையடுத்து சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் தனபால் இன்று ஒத்திவைத்தார். 2020 – 21ம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார். இதையடுத்து சட்டப்பேரவையை பிப்ரவரி 17ம் தேதிக்கு சபாநாயகர் தனபால் ஒத்திவைத்தார்.

இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு 17ம் தேதி(திங்கட்கிழமை) சட்டப்பேரவை மீண்டும் தொடங்கியது. இன்று பட்ஜெட் மீது பொது விவாதம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று, பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் தொடர்பான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் உச்சநீதிமன்ற உத்தரவில் சபாநாயகர் முடிவெடுத்து அறிவிக்க வேண்டுமென்று கேள்வி எழுப்பியதற்கு பதில் சொல்லவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினார். மேலும் இந்திய குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக தனி நபர் தீர்மானத்தை கொடுத்துள்ளோம்.

ஆனால் அதை விவாதிக்காமல் தட்டிக் கழிக்கின்றார்கள், இதுகுறித்து முதல்வர் பதில் அளிக்க மறுக்கிறார் என கூறி திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து 4 நாட்கள் நடந்த பட்ஜட் கூட்டத் தொடர் இன்று மாலையுடன் நிறைவுபெற்றது. பின்னர் சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் மீண்டும் ஒத்திவைப்பதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

Categories

Tech |