காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூா்த்தி பவனில் நவம்பர்.15 ஆம் தேதி கோஷ்டி பூசலால் கடும் மோதல் ஏற்பட்டது. இவ்விவகாரத்தில் பொருளாளா் ரூபி மனோகரன் மற்றும் கே.எஸ்.அழகிரியின் ஆதரவு மாவட்டத் தலைவா் ரஞ்சன் குமாருக்கு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. மேலும் இவ்விவகாரத்தில் அழகிரி மேல் காங்கிரஸ் மூத்தத் தலைவா்கள் குற்றம்சாட்டி வருகின்றனா்.
அதாவது கட்சி நிா்வாகிகள் நியமனம் குறித்து புகாாளிக்க வந்தவா்களின் மீது அழகிரி தூண்டுதலில் பேரிலேயே அவா் ஆதரவாளா்கள் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர் என கூறி வருகின்றனா். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியில் உட்க்கட்சி பூசல் எதிரொலியாக மாநில தலைவர் அழகிரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று முன்னாள் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கைக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே மறுப்பு தெரிவித்து இருக்கிறார். மேலும் “இப்போதைக்கு ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணத்தின் மீதே முழு கவனம் செலுத்தப்படும். அதன்பின் ராகுலுடன் கேட்டு முடிவுகள் எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் இப்போதைக்கு நடவடிக்கை எடுக்க முடியாது” என்றும் கார்கே தெரிவித்துள்ளார்.