Categories
மாநில செய்திகள்

தமிழக இளைஞர்களே…. காவல்துறையில் 10,000+ காலிப்பணியிடங்கள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் பல்வேறு பணியிடத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்புகளை அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது காவல்துறையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இருப்பதாக தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.

காவல்துறையினர் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இணையதளம் மூலம் பெறப்படும் குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை தடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் காவல் துறையில் அதிகமான காலி பணியிடங்கள் இருப்பதால் காவலர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது. அதனுடன் கடந்த ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி 1,33,138 காவலர்களை பணியில் அமர்த்திக் கொள்ளலாம் என்று தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதையடுத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் தற்போது இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதனை தேர்வு வாரியம் மூலமாக தகுதியான நபர்களைத் தேர்வு செய்வதற்கு விரைவில் அறிவிப்பு வெளியாகும். அதுமட்டுமல்லாமல் சுமார் 450 காவல் உதவி ஆய்வாளர் தேர்வு செய்வதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. அதனால் இந்த வாய்ப்பை வேலைதேடும் இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |