தமிழகத்தில் மதமாற்றம் தடைச் சட்டம் வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, காஞ்சிபுரத்தில் ஒரு பள்ளியில் இதே மாதிரியா திருநீறும், ருத்திராட்சமும் போட்ட குழந்தைகள் துன்பத்திற்கு இலக்காகி இருக்கிறார்கள். பெற்றோர்களே புகார் செய்திருக்கிறார்கள், ஆனால் அந்த ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் மதமாற்றம் செயலுக்கு,
இந்து விரோத செயலுக்கு உரம் போடுகின்ற விதத்தில் தமிழக அரசாங்கம் நடப்பதினால் CBI விசாரணை மட்டுமே உண்மையான குற்றவாளிகளை தண்டிக்கும். ஆகவே, இந்த வழக்கை மாநில அரசாங்கம் உடனடியாக சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்.
ஏனென்றால் நாங்கள் இந்த அரசாங்கத்தை நம்பவில்லை, இந்துக்கள் யாரும் இந்த அரசாங்கத்தை நம்ப மாட்டார்கள். தினத்தோறும் காலையில் எந்திரித்தால் கோவிலை இடிக்கின்ற ஒரு இந்து விரோத அரசாங்கம் இது. அதனால் இதை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று நான் தமிழக முதலமைச்சர் அவர்களை கேட்டுகொள்கிறேன்.
அதோடு மட்டுமில்லை. இது எல்லாத்துக்கும் தீர்வு என்ன ? இந்த மத வியாபாரிகள் வியாபாரத்தை நிறுத்த வேண்டும். அப்படின்னா மத மாற்ற தடை சட்டம் மட்டுமே இன்னும் பல உயிரிழப்புகளை தடுக்க முடியும் என்பதால் தமிழக அரசு உடனடியாக மத மாற்ற தடை சட்டம் கொண்டுவர வேண்டும். அது பாரதிய ஜனதா கட்சி, இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிசத் எல்லா இந்து அமைப்புகளும் உரிய முடிவுக்கு கொண்டு வருவோம் என தெரிவித்தார்.