சொத்து வரி உயர்வை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் பா.ஜ.க சார்பில் போராட்டம் நடைபெற்றது. இவர்கள் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தின் போது தி.மு.கவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் சொத்து வரி உயர்வை குறைக்க வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பினர். இந்தப் போராட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். மேலும் இந்த போராட்டத்தில் பா.ஜ.க கட்சியின் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து தாளக்குடி பகுதியில் விஜயகுமார் தலைமையில் பா.ஜ.க வினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அதன்பிறகு கொட்டாரம் பகுதியில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சிவசாமி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதேப்போன்று சுசீந்திரம் பகுதியில் நடைபெற்ற போராட்டத்திற்கு நகர தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். இதைத்தொடர்ந்து கன்னியாகுமரியில் நகர அமைப்பாளர் கனகராஜ் தலைமையிலும், பூதப்பாண்டி பகுதியில் நாகராஜன் தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பா.ஜ.க கட்சியின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். இவர்கள் சொத்து வரி உயர்வு தொடர்பாக தமிழக அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.