தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என போலி அறிவிப்பை நாளிதழில் வெளியிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கூட்டுறவு வங்கியில் நேரடி நியமனம் என போலி அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும், பொதுமக்கள் இதனை நம்ப வேண்டாம் எனவும் கூட்டுறவுச் சங்க பதிவாளர் தெரிவித்துள்ளார்.
தலைமை கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர்,இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் என ஆகஸ்ட் 18ஆம் தேதி பிரபல நாளிதழில் வெளியான விளம்பரம் போலியானது.பணம் பறிக்கும் நோக்கில் வெளியான இது போன்ற விளம்பரத்தை பார்த்து பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.