தமிழக அரசு பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழி கட்டாயமக்கப்படும் என்று கடந்த செப்டம்பர் மாதம் தமிழக சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது. அதில், அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயம்.
தற்போது நடைமுறையில் உள்ள பொதுத் தமிழ் மற்றும் பொது ஆங்கிலம் உள்ள தேர்வுகளில் பொது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு பொதுத்தமிழ் தாள் மட்டுமே மதிப்பீடு தேர்வாக அமைக்கப்படும். இந்த தமிழ்மொழி தாள் 10 ஆம் வகுப்பு தரத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது. மேலும் தமிழ் மொழி தாளில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண் தேர்ச்சி பெற வேண்டும். அதில் தேர்ச்சி பெறவில்லையெனில் இதர தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.