தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு அரசு ஒவ்வொரு வருடமும் பல்வேறு நன்மைகளை செய்து வருகின்றது. இந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிதாக பல்வேறு நலத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. உயர்கல்வி நிறுவனங்களில் அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து கொண்டிருக்கும் மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இலவச சைக்கிள் திட்டத்திற்கு 162 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இளநிலை படிப்புகளுக்கான அனைத்து செலவையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் புதிய திட்டம் மூலமாக 18 ஆயிரம் வகுப்பறைகள் கட்ட இருப்பதாகவும், பள்ளிகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் வகுப்புகள், கணினி ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளது. மேலும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு 293 போடி மற்றும் உயர்கல்வித் துறைக்கு ரூ.5,668.89 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.