இளநிலை சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றுக்கான கலந்தாய்வு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்தில் பிப்ரவரி 28 முதல் மார்ச் 8 வரை நடைபெற உள்ளது.
முதல் நாளில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு கலந்தாய்வு நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு tnhealth.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்துகொள்ளலாம்.