தமிழகத்தில் 12 ஆம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற வசதி இல்லாத மாணவர்கள் உயர் கல்வி பயில்வதற்கு தேவையான கல்வி உதவித்தொகை வழங்க ஆனந்தம் யூத் பவுண்டேஷன் அனுமதி வழங்கி பள்ளிக்கல்வித் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்களை எடுத்து மாணவர்களின் உயர்கல்வி தொடர வசதி இல்லாத மாணவ மாணவியர்களுக்கு 100% கல்வி உதவித்தொகை வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆனந்தம் யூத் பவுண்டேஷன் அமைப்பின் மூலமாக 491 மாணவர்கள் உயர்கல்வி பயின்று வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தமிழக மாணவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.
Categories
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு…. 100% உதவித்தொகை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!
