Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்  அடிக்கடி விடுமுறை எடுக்கும் ஆசிரியர்களின் விபரங்களை சேகரிக்க முதன்மை கல்வி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை உயர்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 246 பள்ளிகள் இருக்கிறது. அதில் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். சமீபகாலமாக அரசு பள்ளிகளில தரத்தை உயர்த்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சில புதிய உத்தரவை முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ளது. அதன்படி உயர்நிலைப்பள்ளிகளில் அடிக்கடி விடுமுறை எடுக்கும் ஆசிரியர்களை சேகரிக்க முதன்மை கல்வி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

அந்த மாவட்டத்தில் கடலூர், வடலூர், சிதம்பரம், விருத்தாசலம் என நான்கு கல்வி மாவட்டங்கள் உள்ளன. அங்கே மொத்தமாக 246 அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. அங்கு ஆசிரியர்கள் சரியாக வகுப்புக்கு வரவில்லை என புகார்கள் எழுந்துள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில்  பணிபுரியும் ஆசிரியர்கள் எண்ணிக்கை , தற்செயல் விடுமுறைஎடுத்தோர் எண்ணிக்கை, மருத்துவ விடுமுறை எடுத்தோர் எண்ணிக்கை, தகவலின்றி விடுமுறை எடுத்தோர் எண்ணிக்கை, விடுமுறைக்கான எண்ணிக்கையும் குறித்த  விவரங்களை சேகரித்து அனுப்ப வேண்டும் என முதன்மை கல்வி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. இது பற்றிய விவரங்களை அறிந்த பள்ளி தலைமை ஆசிரியர்களின் மாவட்டக் கல்வி அலுவலர் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது .

Categories

Tech |