Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணியிடம்…. B.Ed, M.Ed மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மட்டும் 10,331 இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர் காலி பணியிடங்கள் உள்ளது. பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் எப்போதும் ஆசிரியர் தகுதி வாரியத்தின் அடிப்படையில் தான் நிரப்பப்படும். ஆனால் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆசிரியர் தகுதி வாரியத்தின் மூலமாக பணியிடங்களை நிரப்ப கால தாமதமாகும் என்பதால் தற்போதைக்கு தற்காலிக ஆசிரியர்களை கொண்டு பணியிடங்களை நிரப்ப அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கும் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு முன்னுரிமை வழங்க அரசு தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் முதுநிலை ஆசிரியர்களுக்கு மாதம் தோறும் 7,500 ரூபாய் சம்பளமும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம்தோறும் பத்தாயிரம் சம்பளமும், முதுநிலை ஆசிரியர்களுக்கு மாதத்திற்கு 12 ஆயிரம் ரூபாய் வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுவரை 24 மாவட்டங்களில் 2000 பேர் மட்டுமே தற்காலிக ஆசிரியர் பணியில் சேர விண்ணப்பித்துள்ள நிலையில் பி எட்- எம் எட் பயிற்சி மாணவர்களை கொண்டு தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு எடுத்துள்ளது. எனவே இதற்கான நடவடிக்கையில் பள்ளி கல்வித்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

Categories

Tech |