Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள்…. அரசுக்கு வலுக்கும் கோரிக்கை…..!!!

ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் தெரிவித்துள்ளார். 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது முகநூலில் தெரிவித்துள்ளதாவது, அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே அந்த எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பதிவிட்டுள்ளார். அதன்படி இட ஒதுக்கீட்டு முறையை சரியாக பின்பற்றி ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண்கள் மற்றும் பணி மூப்பு அடிப்படையில் ஆசிரியர் காலிப்பணியிடங்களை தமிழக அரசு உடனடியாக நிரப்ப முன்வரவேண்டும்.

மேலும் கடந்த 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சிறப்பு ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள ஆசிரியர்களின் சரியான எண்ணிக்கையும் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது தகுதி தேர்வு எழுதுவதற்கான வயது உச்ச வரம்பு 50 இருந்து 58 ஆக உயர்த்த வேண்டும் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 58 ஆக குறைக்க வேண்டும்.

இவ்வாறு ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அரசாணை எண் 149 படி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் நியமன தேர்வு நீக்கப்பட்டு, கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி 117 ஆவது வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |