Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளிகளின் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்…… பள்ளிக்கல்வித்துறையின் முக்கிய உத்தரவு…..!!!!

தமிழக பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளை சேர்ந்த சில ஆசிரியர்கள் இல்லம் தேடி கல்வி, மின் பாடப் பொருள் தயாரிப்பு, மொழிபெயர்ப்பு பணி, திட்ட கட்டங்கள் தயாரிப்பு பணி போன்றவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தற்போது புகார் எழுந்துள்ளது.

இதன் காரணமாக பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மாற்றுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு பதிலாக பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக் கொள்ளலாம்.

அதன் பிறகு 111 முதுநிலை ஆசிரியர்கள், 39 இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் 32 பட்டதாரி ஆசிரியர்கள் என 182 பேருக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக் கொள்ளலாம். இவர்களை ரூ.7500, ரூ. 10,000 மற்றும் ரூ. 12000 என தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்க வேண்டும். மேலும் பள்ளிகளால் நியமிக்கப்படும் தற்காலிக ஆசிரியர்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் கண்காணிக்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |