Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பல்வேறு அறிவிப்பு சொல்லுறீங்க .. அதோடு இதையும் சேர்த்துக்கோங்க….. பாஜக முக்கிய கோரிக்கை

தமிழக அரசு சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு என்றே ஒரு தனியான அருங்காட்சியகத்தை அமைக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், தமிழகத்தினுடைய விடுதலைப் போராட்டத்தில் தன்னுடைய வாழ்க்கையை தியாகம் செய்து கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம் கொடுத்த திருப்பூர் குமரன் அவர்களுடைய பிறந்த தினம் இன்று. அதே போல தன்னுடைய பேச்சாலும், வாழ்க்கையாலும் தமிழகத்தினுடைய சுதந்திர வேட்கையை தூண்டிய திரு சுப்பிரமணிய சிவா அவர்களுடைய பிறந்த தினமும் இன்று.  இந்த இரண்டு தியாகிகளுக்கும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இன்று எங்களுடைய மரியாதையை, வணக்கங்கள் தெரிவித்துக்கொள்கின்ற நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் எண்ணற்ற சுதந்திர போராட்ட தியாகிகள் அவருடைய வாழ்க்கையை சுத்தந்திரத்திற்காக தியாகம் செய்துள்ளனர். இவற்றையெல்லாம் இப்போது இருக்கக்கூடிய தலைமுறை, வருங்கால தலைமுறைக்கு எடுத்துச் செல்கின்ற வகையில் தமிழக அரசு சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு என்றே ஒரு தனியான அருங்காட்சியகத்தை அமைக்க வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த நாட்டின் விடுதலை வேள்வியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒவ்வொரு நபரையும் நினைவு கூற வேண்டியது நம்முடைய கடமையாக நாங்கள் நினைக்கிறோம். அந்த வகையில் இந்த வருடம் கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனார் அவருடைய 150-ஆவது பிறந்த ஆண்டும், அதே போல மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவருடைய நூறாவது நினைவு ஆண்டும் ஒருசேர கொண்டாடப்படுகிறது.

தமிழக அரசும் அதற்காக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். எங்கள் மத்திய அமைச்சர்கள் கூட பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் போற்றப்பட வேண்டிய நினைவுகூற வேண்டிய ஆயிரக்கணக்கான சுதந்திர போராட்ட தியாகிகளை ஓரிடத்தில் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்கான ஒரு அருங்காட்சியகத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும் என இந்த நேரத்தில் நாங்கள் கோரிக்கை வைக்கிறோம் என அவர் தெரிவித்தார்.

Categories

Tech |