Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பு…. மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்…. அரசுக்கு வலுக்கும் கோரிக்கை….!!!

கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற பட்ஜெட் தாக்கலில் பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிப்புகள் இடம்பெறும் என அரசு ஊழியர்களால் எதிர்பார்க்கப்பட்டது.

ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் அண்மையில் அந்த மாநில அரசானது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ள நிலையில், தமிழகத்திலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அறிவிக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2003 ஆம் ஆண்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, புதிய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்துள்ளார். தற்போது அவர் ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைய போகும் நிலையில், இதுவரை அதுபற்றி எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை. அதிலும் குறிப்பாக கடந்த 18ஆம் தேதி நடந்த பட்ஜெட் தாக்கலின்போது பழைய ஓய்வூதிய திட்டத்தை பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என அரசு ஊழியர்கள் பலர்  எதிர்பார்த்தனர்.

ஆனால் அத்தகைய அறிவிப்புகள் எதுவும் இடம்பெறாது அவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக அரசுக்கு, புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதில் வருடத்திற்கு கூடுதலாக ரூ.3,000 கோடி செலவாகும் என்று கூறப்படுகிறது. ஆகவே மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

Categories

Tech |