தமிழக அரசு ரேஷன் கடை ஊழியர்களுக்கு 17 சதவீத அகவிலைப்படி வழங்குவது தொடர்பாக சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளார். அதில் அரசு ஊழியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அகவிலைப்படி உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் அமல், சம்பள உயர்வு போன்ற வாக்குறுதிகளை அளித்துள்ளார். அதன்படி, இவரது ஆட்சிக்கு வந்தவுடன், 2022 ஆம் ஆண்டு முதல் அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று மானிய கோரிக்கை விவாதத்தின் போது தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அதாவது 17 % இருந்து 31 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 7-வது ஊதிய கமிஷன் ஓய்வூதியம் பெறுபவர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு திருத்தப்பட்ட அகவிலைப்படி 32% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டு வாடகைப் படியும் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தின் கோவை மண்டல கவன ஈர்ப்பு கூட்டம் டாடாபாத் பகுதியில் நடைபெற்றுள்ளது. இதில் அகவிலைப்படி வழங்குதல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
இதனையடுத்து இக்கவன ஈர்ப்பு கூட்டத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். அப்போது அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டதை போல ரேஷன் கடை ஊழியர்களுக்கும் 17 சதவீத அகவிலைப்படி தொகையை வழங்க வேண்டும் எனவும், மேலும் பொருட்களை சரியான அளவில், சரியான எடையில் வழங்க வேண்டும். இதனை தொடர்ந்து பொருட்களை பொட்டலங்களாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.