Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 நாட்கள் வரை சிறப்பு தற்செயல் விடுப்பு…. வெளியான ஜாக்பாட் அறிவிப்பு…!!!!!!

தமிழகத்தில் கொரோனா கால கட்டத்தில் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. அதனால் தனியார் ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே பணி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டார்கள். ஆனால் அரசு ஊழியர்கள் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ள சூழ்நிலையில் கூட அலுவலகத்திற்கு நேரில் சென்று பணியில் ஈடுபபட்டிருந்தனர். இதனால் ஏராளமான அரசு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.

அத்துடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி ஏராளமான ஊழியர்கள் உயிரிழந்தனர்.இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதனால் கொரோனாவால் தடை செய்யப்பட்ட இடங்களில் வசிக்கும் பகுதிகளில் உள்ள ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே பணி புரியுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்படுகிறது.

மேலும் கொரோனா சிகிச்சை பெற்றதற்கான சான்றிதழை சமர்ப்பித்தும் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்படும் என்று சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது பெண் ஊழியர்கள் அறுவை சிகிச்சை செய்தால் அவர்களுக்கும் சிறப்பு தற்செயல் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.அதன்படி இவர்களுக்கு 21 நாட்கள் வரை சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து அரசு ஊழியரின் மனைவிக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொண்டால் அந்த ஊழியர்களுக்கு அதிகபட்சமாக 7 நாட்கள் வரை சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்க உள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டபட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Categories

Tech |