Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்… நிதியமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழக அரசு ஊழியர்களுக்கு கூடிய விரைவில் அகவிலைப்படி உயர்த்தப்படும் என நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வானது கொரோனா தாக்கத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் திமுக அரசு அகவிலைப்படியை உயர்த்தி என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த முறை பட்ஜெட் தாக்கல் செய்யும்போது 2022 ஆம் வருடத்திற்கான பட்ஜெட்டின் போது அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி உயர்த்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். இந்நிலையில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர், “அரசு ஊழியர்களில் நலனுக்காக உயர்த்தப்பட்ட அகவிலைப்படி தொகையை அரசு ஊழியர்களுக்கு வழங்குவதற்காகவும் ஓய்வூதிய பலன்களை வழங்குவதற்காக பட்ஜெட்டில் ஏறத்தாழ 19,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கின்றது” என கூறியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடியே 2022-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி தொகையை உயர்த்தியுள்ளார். இதனால் அரசு ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |