Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்?…. அரசு எடுக்கும் முடிவு என்ன?…..!!!!!

கடந்த 1968 ஆம் வருடத்தில் இருந்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு மூலம் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் ஓய்வூதியம் தொகை ரூபாய் 20 என்று தொடங்கப்பட்டது. எனினும் அரசு ஊழியர்களின் பல போராட்டங்களுக்கு பின் ஓய்வூதிய தொகை உயர்த்தப்பட்டது. இதையடுத்து உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் பல போராட்டங்கள் அடிப்படையில் தமிழகத்தில் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் பெற்றுவந்த ஓய்வூதியம் 2004  ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டு, பங்களிப்பு ஓய்வூதியம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இத்திட்டத்தின்படி யாருக்கும் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் ஏப்ரல் 1, 2004 முதல் பணியில் சேர்ந்த ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் நலன் மற்றும் அரசின் நலனுக்கு முற்றிலும் எதிரானதாக இருக்கிறது.

தமிழகத்தில் புதிய ஓய்வூதியம் திட்டத்தினை ரத்துசெய்ய வேண்டும் என்று அரசு ஊழியர்கள் 19 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். எனினும் இதுவரையிலும் இந்த போராட்டத்திற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் பழைய ஓய்வூதியம் திட்டம் அமலுக்கு வர இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அத்துடன் பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழ்நாடு அரசு பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். சமீபகாலமாக அரசு ஊழியர்கள் சங்கம், ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பாக புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய முதல்வர் ஸ்டாலினுக்கு மனு அனுப்பப்பட்டு வருகிறது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியாக திமுக ஆட்சி வந்தால் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனை கருத்தில்கொண்டு புதிய ஓய்வூதியம் திட்டத்தினை ரத்து செய்யக்கோரி கரூர் மாவட்டம் சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் சார்பாக 1 லட்சம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. அப்போது மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மகாவிஷ்ணு தலைமையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. அதுமட்டுமின்றி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர், திமுக-வின் தேர்தல் வாக்குறுதிப்படி சிபிஎஸ்-ஐ ரத்து செய்திடுக என்று பேட்ஜ் அணிந்திருந்தனர். இதற்கு முன்பாக ராமநாதபுரத்தில் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பாக புதிய ஓய்வூதியம் திட்டத்தினை ரத்து செய்யக்கோரி முதல்வருக்கு மனு அனுப்ப கையெழுத்து இயக்கம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |